பத்ம விருது பரிந்துரை நிரகாரிப்பு

Home

shadow


இந்த ஆண்டுக்கான பத்ம விருதுக்கு 8 மாநிலங்கள், 7 ஆளுநர்கள் மற்றும் 14 மத்திய அமைச்சர்கள்  பரிந்துரைத்த பெயர்கள்  நிராகரிக்கப்பட்டுள்ளன.

இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகள் கடந்த ஜனவரி 25ஆம் தேதி அறிவிக்கப்பட்டன. இந்த பரிசுக்காக மாநில அரசுகள், ஆளுநர்கள், முதலமைச்சர்கள்மத்திய அமைச்சர்கள், மத்திய இணை அமைச்சர்கள், பத்ம விருது பெற்ற முன்னாள் கலைஞர்கள், தனிநபர்கள் மற்றும் அமைப்புகள் சார்பில் மொத்தம்  35 ஆயிரத்து 595 பரிந்துரைகள் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டன. 10 உறுப்பினர்கள் அடங்கிய தேர்வு குழு இவர்களில் இருந்து மொத்தம் 84 பேரின் பெயரை பத்ம விருதுக்கு தேர்வு செய்துள்ளனர். இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகள் நாளையும், ஏப்ரல் 12ஆம் தேதியும் வழங்கப்பட உள்ளன.

இந்நிலையில் 8 மாநிலங்கள், 7 ஆளுநர்கள் மற்றும் 14 மத்திய அமைச்சர்கள் பரிந்துரைத்த பெயர்கள் தேர்வு குழுவால் நிராகரிக்கப்பட்டுள்ளன. இதில் தமிழகம், ஹரியானா, ஜம்மு காஷ்மீர், கர்நாடகா, உத்தரகாண்ட், பீகார், ராஜஸ்தான், டெல்லி மாநில அரசுகள் பரிந்துரைத்த அனைத்து பெயர்களும் நிராகரிக்கப்பட்டுள்ளன. 

இது தொடர்பான செய்திகள் :