பாடகியாக அவதாரம் எடுக்கும் காற்று வெளியிடை திரைப்படத்தின் நாயகி

Home

shadow

       ஜி.வி.பிரகாஷை வைத்து `ஜெயில்' என்ற படத்தை இயக்கி இருக்கிறார். வசந்தபாலன்,  இந்த படத்தில் நாயகனாக நடிப்பதோடு மட்டுமில்லாமல் 12 வருடங்களுக்கு பிறகு வசந்த பாலன் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

                                

படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்திற்கு இசையமைக்கும் பணிகளில் ஜி.வி.பிரகாஷ் தீவிரமாக இறங்கியுள்ளார். இதில் ஒரு பாடலை அதிதி ராவ் பாடுவதாக ஜி.வி.பிரகாஷ் அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

 

வசந்த பாலன் இயக்கத்தில் நான் நடித்து, இசையமைக்கும் ஜெயில் படத்தின் மூலம் திறமைமிக்க அதிதி ராவ் ஹிடாரி தமிழ் சினிமாவில் பாடகியாக அறிமுகமாவதில் மகிழ்ச்சியடைகிறேன். காத்தோடு என தொடங்கும் இந்த டூயட் பாடலில் நானும், அதிதியும் இணைந்து பாடுகிறோம்.. என்று குறிப்பிட்டுள்ளார்...

இது தொடர்பான செய்திகள் :