பிரிட்ஸர் பரிசு பெறும் இந்தியர்

Home

shadow


2018-ம் ஆண்டிற்கான பிரிட்ஸர் பரிசு விருதுக்கு இந்தியாவின்  பாலகிருஷ்ணா தோஷி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

உலகின் சிறந்த கட்டிட வடிவமைப்பாளர்களுக்கு ஆண்டுதோறும் பிரிட்ஸர் பரிசானது வழங்கப்பட்டு வருகிறது. கட்டிட வடிவமைப்பாளர்களின் நோபல் பரிசாக கருதப்படும் இவ்விருதிற்கு, இந்த ஆண்டு, இந்தியாவின்  பாலகிருஷ்ணா தோஷி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 90 வயதாகும் தோஷி 50 ஆண்டுகளுக்கும் மேலாக கட்டிட வடிவமைப்பு துறையில் செயல்பட்டு வருகிறார். மலிவான வீட்டுவசதி வடிவமைப்பு மற்றும் பாரம்பரியத்துடன் கூடிய நவீனத்துவ வடிவமைப்பு போன்றவற்றுக்காக இவ்விருது அவருக்கு வழங்கப்படுகிறது. வரும் மே மாதம் டொரோண்டோவில் நடைபெறும் விழாவில் இந்த விருதானது அளிக்கப்பட உள்ளது.  பிரிட்ஸர் பரிசு விருது பெறும் முதல் இந்தியர் பாலகிருஷ்ணா தோஷி என்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பான செய்திகள் :