போனி கபூரிடம் விசாரணை  

Home

shadow

 

நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூரிடம் துபாய் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.

துபாயில் மரணமடைந்த நடிகை ஸ்ரீதேவியின் பிரேத பரிசோதனை சான்றிதழ் மற்றும் தடயவியல் அறிக்கை நேற்று பிற்பகல் வெளியானது. ஓட்டல் அறையின் குளியல் தொட்டியில் உள்ள தண்ணீரில் மூழ்கியதால் ஸ்ரீதேவியின் உயிர் பிரிந்ததாகவும், அவரது மரணத்தில் சதிச்செயல்கள் இல்லை என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரேத பரிசோதனை அறிக்கை வெளியானதை அடுத்து, அவரது உடல் எம்பாமிங் செய்ய அனுப்பி வைக்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால், சட்ட ரீதியிலான சிக்கல்கள் தீராததால் எம்பாமிங் செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூரிடம் துபாய் போலீசார் விசாரணை நடத்தி அதனை பதிவு செய்துள்ளனர் துபாயில் உள்ள புர் துபாய் காவல் நிலையத்தில் போனி கபூரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

இது தொடர்பான செய்திகள் :