மஸ்காரா போடும் அக்ஷய் குமார்; வெளிவந்தது ஹிந்தி காஞ்சனா படத்தின் பஸ்ட் லுக்

Home

shadow

ராகவா லாரன்ஸ் இயக்கி, நடித்த படம் ‘காஞ்சனா’. ‘முனி’ படத்தின் இரண்டாம் பாகமாக உருவான இந்தப் படம்,  2011-ம் ஆண்டு வெளியானது. ராகவா லாரன்ஸ் ஜோடியாக ராய் லட்சுமியும், திருநங்கை கதாபாத்திரத்தில் சரத்குமாரும் நடித்திருந்தனர்.

கோவை சரளா, ஸ்ரீமன், தேவதர்ஷினி, தேவன், மனோபாலா, மயில்சாமி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்த இப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது.

தற்போது 8 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது 'காஞ்சனா'. 'லட்சுமி பாம்' என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் அக்‌ஷய் குமார் நாயகனாக நடித்து வருகிறார். கைரா அத்வானி நாயகியாக நடித்து வருகிறார். சரத்குமார் நடித்த திருநங்கை கதாபாத்திரத்தில் அமிதாப் பச்சன் நடிக்கவுள்ளார்.'லட்சுமி பாம்' படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இணையத்தில் ட்ரெண்டிங்கில் உள்ளது.


இது தொடர்பான செய்திகள் :