மும்பை 140 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்திய தேசிய சினிமா அருங்காட்சியகத்தை நாளை திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி

Home

shadow

              மும்பையில் 140 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்திய தேசிய சினிமா அருங்காட்சியகத்தை பிரதமர் மோடி நாளை திறந்துவைக்கிறார்.


மும்பை பிலிம் டிவி‌ஷன் வளாகத்தில் 140 கோடியே 61 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இந்திய தேசிய சினிமா அருங்காட்சியகம் கட்டப்பட்டுள்ளது. 19ஆம் நூற்றாண்டு வரலாற்று அரண்மனையான குல்‌ஷன் மஹால் மற்றும் ஒரு புதிய கட்டடம் என 2 கட்டடங்களில் இந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. நூறு ஆண்டுகளை கடந்த இந்திய சினிமாவின் வரலாற்று புகைப்படங்கள், வீடியோ, கிராபிக்ஸ், கலைவடிவம் போன்ற பல்வேறு வழிகளில் ஒரு கதைபோல் விளக்கும் வகையில் இந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. தயாரிப்பாளர் ஷியாம் பெனகல் தலைமையிலான அருங்காட்சியக ஆலோசனை குழு இதனை வடிவமைத்துள்ளது. இந்த அருங்காட்சியகத்தை பிரதமர் மோடி நாளை தொடங்கிவைக்கிறார்.

இது தொடர்பான செய்திகள் :