யுகாதி வாழ்த்து

Home

shadow

 

யுகாதி திருநாளை கொண்டாடும் தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்களுக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தெலுங்கு, கன்னட மொழி பேசும் மக்களின் புத்தாண்டு தினமான யுகாதிப் பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. இதுதொடர்பாக தமிழக ஆளுநர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், யுகாதி திருநாளை கொண்டாடும் தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்களுக்கு தமது உளப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார். யுகாதி திருநாளை மகிழ்ச்சிகரமாக, பாரம்பரியமாக கொண்டாடும் வேளையில், மக்கள் அனைவரும் நாட்டின் வளர்ச்சிக்காக ஒருங்கிணைந்து செயல்பட வேண்டுமென்றும், நமது முயற்சிகள் அனைத்தும் நாட்டின் அமைதிக்காகவும், வலிமைக்காகவும், ஒளிமயமான வளர்ச்சிக்காகவும் உதவ வேண்டும் என்று விரும்புவதாகவும் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

இதேபோல், தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்களுக்கு தமிழக முதலமைச்சர் பழனிசாமி, யுகாதி தின வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், யுகாதி என்னும் புத்தாண்டு திருநாளை கொண்டாடும் மக்களுக்கு தமது இதயம் கனிந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வதாக குறிப்பிட்டுள்ளார். யுகாதி புத்தாண்டு, அனைவரது வாழ்விலும் அனைத்து நலன்களையும், வளங்களையும் வழங்கும் ஆண்டாக மலரட்டும் என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான செய்திகள் :