ரசிகர்களை ரசிக்க வைக்குமா - பியார் பிரேமா காதல்

Home

shadow

                     காதல் திருமணமே பிடிக்காத பெற்றோர்கள் ஆனால் காதலித்து கல்யாணம் செய்யு விரும்பும் அவர்களது மகன் ஹீரோ (ஹரீஷ் கல்யாண்),  ஒரு கனவோடு வாழும் ஹீரோயின் (ரெய்சா), அவரது கனவை நிறைவேற்ற துடிக்கும் அவரது அப்பா. இவர்களை சுற்றியே இக்கதையானது நகர்கிறது. நண்பர்களாக பழகி பிறகு காதலர்களாக மாறுகிறார்கள் ஹீரோ ஹீரோயின் ஆனால் தன் கனவுகள் நிறைவேறும் முன் கல்யாணம் செய்ய முடியாது என்று ஹீரோயின் கண்டிப்பாக சொல்ல, திருமணம் செய்துகொள்ளாமல் சேர்ந்து வாழ இருவரும் முடிவு செய்கிறார்கள்.

 

இணைந்து வாழும் போது சண்டை. மனக்கசப்பு ஏற்பட்டு இருவரும் பிரிகின்றனர். ஹீரோயின் மேலுள்ள கோபத்தில், வீட்டில் பார்க்கும் பெண்ணை கல்யாணம் செய்ய ஒப்புக் கொள்கிறார் கதையின் நாயகன் (ஹரிஷ்). இந்த செய்தியைக் கேட்ட கதாநாயகி, தன் கனவுப் பயணத்தை நோக்கிய வேலைகளை தீவிரப்படுத்துகிறார். 

 

இவர்கள் மீண்டும் இணைவார்களா இல்லையா? என்னும் ஆவலில் நகர்கிறது பியார் பிரேமா காதல் கதை.

இது தொடர்பான செய்திகள் :