ரூ 2500 கோடி வசூல் செய்த ஹாலிவுட் படம்

Home

shadow


             சாகசங்கள் நிறைந்த திரைப்படம் என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி பார்கப்படும் படமாக இருக்கும். ஹாலிவுட் படங்களுக்கு எப்போதும் உலக அளவில் நல்ல வரவேற்பு உள்ளது. அதிலும், ரூ 2500 கோடி  வரை வசூல் செய்யும் படங்களும் இருக்கிறது.
             ராபின் வில்லியம்ஸ், போனி ஹன்ட், கிர்ஸ்டென் டன்ஸ்ட், பிராட்லி பியர்ஸ், டேவிட் ஆலன் க்ரீர், ஜொனாதன் ஹைட், மற்றும் பெப் நியூவெர்  நடிப்பில் ஜோ ஜான்ஸ்டன் இயக்கத்தில் வெளிவந்த  ஜுமான்ஜி-1, 263 மில்லியன் டாலர் வசூல் செய்து பாக்ஸ் ஆபீஸ் ஹிட் ஆனது. 2017 ஆம் ஆண்டு  ட்வெயின் ஜான்சன், ஜேக் பிளாக், கெவின் ஹார்ட், கரேன் கில்லன், நிக் ஜோனாஸ், மற்றும் பாபி கன்னவலே நடித்த ஜுமான்ஜி-2 வெளியான இரண்டே வாரத்தில்  ரூ 2500 கோடி வசூல்  செய்தது. இதில் இந்தியாவில் மட்டும் ரூ 50 கோடி வசூலானது  குறிப்பிடத்தக்கது. இப்படம் அமெரிக்காவில் மட்டுமே 200 மில்லியன் டாலர் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. 

இது தொடர்பான செய்திகள் :