ரேடியோ ஜாக்கியாக ஆசைப்படும் நடிகை

Home

shadow

 

‘36 வயதினிலே’, மகளிர் மட்டும், ‘நாச்சியார்’ படங்களை தொடர்ந்து ஜோதிகா,  வித்யாபாலன் இந்தியில் நடித்துள்ள ‘தும்ஹரி சுளு’ படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.  

வித்யா பாலன் நடித்துள்ள ‘தும்ஹரி சுளு’ என்ற இந்திப்படத்தில் திருமணமான நடுத்தர வயதுப் பெண்ணான வித்யா பாலனின் குறிக்கோளும், ரேடியோ ஜாக்கி ஆகி சாதிப்பதும் தான் கதையின் கரு. இந்தப் படத்தை ராதா மோகன் இயக்கப் போவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதுபற்றி ஜோதிகாவிடம் கேட்டபோது, படத் தயாரிப்பாளர்கள் இதுதொடர்பாக தன்னை அணுகினார்கள். இன்னும் ஒப்பந்தம் முடிவாகவில்லை. வித்யாபாலன் நடித்துள்ள அந்த இந்திப் படத்தை நான் பார்த்தேன். மிக நன்றாக இருக்கிறது. இப்போதைக்கு ‘செக்கச்சிவந்த வானம்’ படத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறேன். நான் சம்பந்தப்பட்ட காட்சிகள் மார்ச் மாதத்தில் முடிவடைகிறது. அதன்பிறகு மே அல்லது ஜூன் மாதத்தில் ‘தும்ஹரி சுளு’ படப்பிடிப்பு தொடங்கும் என்றார்.

இது தொடர்பான செய்திகள் :