வெயிலும்... தர்பூசணியும்

Home

shadow

வெயிலும்... தர்பூசணியும் 


வெயில் சுட்டெரிக்க தொடங்கியதும் பழங்கள், ஜூஸ்களை பருகுவதற்கு பலரும் விரும்புவார்கள். அவை உடலை குளிர்ச்சி படுத்தவும் தாகத்தைத் தணிக்கவும் உதவுகின்றன. தர்பூசணி பழத்திற்கு இந்த இரண்டும் இருக்கிறது. உடலில் நீர்ச் சத்தை சீராக பராமரிக்க துணைபுரிவதுடன் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டிருக்கின்றன. அதில் இருக்கும் லைகோபீன்கள் சிறுநீரகத்தை சுத்தம் செய்வதற்கு உதவும். தர்பூசணி விதைகளை ஊறவைத்து அதை நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி பருகினால் சிறுநீரகங்கள் தூய்மையாகி விடும் என்கிறார்கள். வெயில் காலத்தில் தர்பூசணி சாப்பிடுவதன் அவசியம் குறித்து பார்ப்போம் 

தர்பூசணியில் வைட்டமின் ஏ மற்றும் பீட்டா கரோட்டின் அதிகமாக இருக்கிறது. அது சருமத்திற்கும் கூந்தலுக்கும் நல்லது. மேலும் தர்பூசணியில் இருக்கும் வைட்டமின் சி உடலின் உயிர் அணு அமைப்பு மற்றும் நோயெதிர்ப்பு செயல்பாடுகளுக்கு அவசியமான கொலாஜன் உற்பத்தி செய்யத் துணை புரியும். காயங்களை விரைவாக குணப்படுத்துவதற்கும் உதவும். 

தர்பூசணியில் 92% நீர் நிறைந்திருப்பதால் உடலின் நீர்ச்சத்தை அதிகரிக்க உதவும். அதோடு குறைவான   கலோரிகளே கொண்டிருப்பதால் தர்பூசணியை முழுவதுமாக சாப்பிட்டால் கூட அதன் கலோரி அடர்த்தி குறைவாகவே இருக்கும் 


தர்பூசணியில் இருக்கும் கரோட்டினாய்டு ஒரு இயற்கை நிறமி. இது தர்பூசணிக்கு தனித்துவமான சிவப்பு நிறத்தை அளிக்கிறது. இந்த நிறமி பல்வேறு நன்மைகளையும் தருகிறது 

தர்பூசணியில் நார்ச் சத்தும் நிறைந்து இருக்கிறது அது நீருடன் கலந்து தேவையற்ற பசி உணர்வை கட்டுப்படுத்தும் வழக்கமாக சாப்பிடும் நேரத்திற்கு முன்பாகவே பசித்தால் தர்பூசணியை சாப்பிடலாம் அது பசி உணர்வு தாமதப்படுத்தும்

இது தொடர்பான செய்திகள் :