வெறுப்பு உன் வாழ்க்கையையே அழித்து விடும்

Home

shadow

வெறுப்பு என்ற நான்கெழுத்து வார்த்தை, மனித வாழ்க்கையை கறுப்பாக்க கூடியது. அதனால் மற்றவர்களை நீங்கள் வெறுக்கக்கூடாது வெறுக்க கூடாது. உங்களையும் நீங்கள் வெறுக்கக் கூடாது. வெறுப்பு, உங்கள் மீதே உங்களுக்கு இருந்தாலும் நீங்கள் பாதிக்கப்படுவீர்கள். மற்றவர்கள் மீது உங்களுக்கு வெறுப்பு ஏற்பட்டால் நீங்கள் பாதிக்கப்படுவதோடு, சமூகமும் பாதிக்கப்படும். 

வெறுப்பு ஒருவருக்கு தோன்ற ஏராளாமான காரங்கள் இருக்கின்றன. தான் எதிர்பார்த்தப்படி மற்றவர்கள் நடக்காமல் போனால் தான் ஆசைப்பட்டது மற்றவர்களுக்கு கிடைத்து விடும்போது, மற்றவர்கள் பார்வையில் தனது மரியாதை குறைந்து போகும் போது  வெறுப்பு வரும். சந்தர்ப்ப சூழ்நிலை தன்னை குற்றவாளியாகும்போதும், தனக்கு பிரியமானவர்கள் எதிராளியாகும் போதும், சவாலை எதிர்கொள்ள போதிய பலம் இல்லாத போதும் வெறுப்பு தோன்றுவதுண்டு. மீண்டும் மீண்டும் தோல்வியடையும் போதும் முயற்சி செய்தும் தோல்வியடையும் போதும் வெறுப்பு உருவாகலாம் 

உண்மையான உழைப்பு மற்றவர்களின் சூழ்ச்சியில் வியமாகும் நிலையிலும்,நேர்மை தோற்றுப்போகும் நிலையிலும்   திறமை  இருந்தும் அதற்கான  சந்தர்ப்பம் வாய்க்காத போதும் வெறுப்பு ஏற்படலாம். தன்னை மற்றவர்கள் தவறாக புரிந்து கொள்ளும்போது வெறுப்பு தோன்றுவது உண்டு 


இன்னொருவர் மீதோ,ஒரு குழு மீதோ உங்களுக்கு வெறுப்பு ஏற்பட்டாலும், உங்கள் மீதே உங்களுக்கு வெறுப்பு தோன்றினாலும் அந்த வெறுப்பை உடனே உங்கள் மனதில் இருந்து அப்புறப்படுத்துங்கள். அது அப்படியே தங்கிவிட்டால் அது உங்கள் எதிர்காலத்தை பாதிக்கும். மற்றவர்கள் மீது காட்டும் காரணமற்ற வெறுப்பு அவர்களை உங்களைவிட்டு விலகி செய்துவிடும்.உங்களை தவறான முடிவால் எடுக்கவும் தூண்டி விடும்.

எனவே வெறுப்பு என்ற ஒன்றை எந்த காலகட்டத்திலும் நம்மிடம் நெருங்கவிடாமல் அதற்க்கு எதிர்மறையான ஆக்கப்பூர்வமான விஷயங்களை செய்து வந்து வாழ்வில் நாமும் நம்மை சுற்றியுள்ளவர்களையும் பாதுகாத்து கொள்வோம் 

இது தொடர்பான செய்திகள் :