ஸ்ரீதேவி உடல் வருகை  

Home

shadow

 

துபாயில் மரணமடைந்த நடிகை ஸ்ரீதேவியின் உடல் தனி விமானம் மூலம் நேற்றிரவு மும்பை கொண்டுவரப்பட்டது. இறுதி சடங்குகள் இன்று மாலை நடைபெற உள்ளது.

நடிகை ஸ்ரீதேவி துபாயில் உள்ள ஓட்டலில் குளியலறை தொட்டியில்  தண்ணீர் மூழ்கி உயிரிழந்ததாக தடயவியல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. மேலும் அவர் மது அருந்தி இருந்ததாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஸ்ரீதேவி மரணம் தெடர்பாக அவரது கணவர் போனி கபூரிடம் துபாய் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பின்னர் ஸ்ரீதேவியின் உடலை அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்க துபாய் போலீசார் அனுமதிக் கடிதம் வழங்கினர். இதையடுத்து ஸ்ரீதேவியின் உடல் எம்பாமிங் செய்யப்பட்டு, தனி விமானம் மூலம் நேற்றிரவு மும்பை கொண்டு வரப்பட்டது. அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள ஸ்ரீதேவியின் உடலுக்கு இன்று மாலை இறுதி சடங்குகள் நடைபெற உள்ளது.

இது தொடர்பான செய்திகள் :