75 வது கோல்டன் க்ளோப் விருதுகள்

Home

shadow

அமெரிக்காவில் சிறந்த திரைப்பட மற்றும் தொலைக்காட்சி தொடர்களுக்கு ஹாலிவுட் FOREIGN PRESS ASSOCIATION கோல்டன் க்ளோப் விருதுகளை 1944ஆம் ஆண்டு முதல் வழங்கிவருகிறது. இந்த ஆண்டு 75 வது கோல்டன் க்ளோப் விருதுகள் விழா கலிபோர்னியா மாகாணம் பெவெர்லி ஹில்ஸ் பகுதியில் நடைபெற்றது. மொத்தமுள்ள 25 விருதுகளில், திரைப்படங்களுக்கு 14 விருதுகளும் , தொலைக்காட்சிக்கு 11 விருதுகளும் வழங்கப்பட்டன. ஹாலிவுட்டில் பணிபுரியும் பலர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி இருப்பதாக அண்மையில் தகவல்கள் வெளியாகின. அதனைக்கண்டிக்கும் வகையில், விழாவில் கலந்து கொண்ட பிரபலங்கள் கருப்பு உடையணிந்திருந்தனர்.எலிசபெத்மோஸ், லாராடெர்ன்மற்றும் நிகோல்கிட்மேன் உட்பட பலருக்கு விருதுகள் வழங்கப்பட்டன. சிறிந்த அனிமேஷன் திரைப்படமாக கோகோ திரைப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டது.

இது தொடர்பான செய்திகள் :