சேலம் அன்னதானப்பட்டியில் 50 கிலோ போலியான நெய் பறிமுதல் செய்யப்பட்டது.

Home

shadow


     சேலம் அன்னதானப்பட்டி அருகே உள்ள கந்தப்பா காலனியில் போலியான நெய் தயாரித்து விற்பனை செய்து வருவதாக  உணவு பாதுகாப்பு துறைக்கு தகவல் வந்துள்ளது. இதனையடுத்து மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி மாரியப்பன் தலைமையிலான அதிகாரிகள் பிரபு என்பவரின் நெய் ஆலையில் ஆய்வு மேற்கொண்டனர். இதில் போலியான கவர்கள் தயாரிக்கப்பட்டு பாமாயில், டால்டா மற்றும் நிறமி கலந்து போலியான நெய் பாக்கெட்டுகள் தயாரிக்கப்பட்டு வந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அந்தக் கிடங்கில் 50 கிலோ நெய் பாக்கெட்டுகள், கேன்கள்  உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டு கிடங்குக்கு சீல் வைக்கப்பட்டது. மேலும் உணவு மாதிரியின் அறிக்கை கிடைத்ததும் சம்பந்தப்பட்டவர் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டு சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான செய்திகள் :