தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு அரசுப் பணி

Home

shadow


       தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தோர் மற்றும் காயமடைந்தோர்  குடும்பத்தினருக்கு அரசுப் பணிகளுக்கான நியமன ஆணையை முதலமைச்சர் பழனிசாமி இன்று வழங்கினார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்டெர்லை ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர். இவர்கள் அனைவருக்கும் தமிழக அரசு சார்பில் நிவாரண உதவி அளிக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து தற்போது உயிரிழந்தோர் மற்றும் காயமடைந்தோர் குடும்பத்தினருக்கு அரசுப் பணி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான பணி நியமன ஆணைகளை தமிழக முதல்மைச்சர் பழனிசாமி இன்று வழங்கினார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சியில் செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி ஆகியோர் பங்கேற்றனர். இதில் 19 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் பழனிசாமி வழங்கினார்.

இது தொடர்பான செய்திகள் :