பத்மாசனம்

Home

shadow


 

செய்முறை

1.       முதலில் தரையில் அமர்ந்து கொண்டு, கால்கள் இரண்டையும் நேராக நீட்டவும்.

2.       காலை வலது தொடையிலும், வலது காலை இடது தொடை மீதும் மாற்றிப் போடவும்.

3.       கால்மூட்டுகள் இரண்டும் தரையைத் தொடவேண்டும்.

4.       குதிகால்கள் இரண்டும் வயிற்றின் அடிப்பாகத்தை தொடும்படியாக அமரவும்.

5.       முதுகு எலும்பை நேராக நிமிர்த்திக் கம்பீரமாக உட்கார வேண்டும். இரண்டு கைகளையும் சின் முத்திரையுடன் கண் பார்வையை மூக்கின் நுனியில் செலுத்தவும்.

6.       ஒன்று முதல் மூன்று நிமிடம் வரை இதே நிலையில் இருக்கலாம்.

பலன்கள்:

1.       அடிவயிற்றுப் பகுதிக்கு இரத்த ஓட்டம் அதிகமாகும். நன்றாக பசி எடுக்கும்.

2.       வாதநோய் தீரும்.

3.       கோபம் குறையும், மன உறுதி ஏற்படும், கூன் முதுகு நிமிறும்.

4.       நாடி சுத்தி, பிராணாயாமம் இந்நிலையில் இருந்து கொண்டு செய்தல் நலம்.

5.       வழிபாடு, ஜபம், தவம், மன ஒருமைப்பாடு இவற்றிக்குச் சிறந்தது.

 

 

இது தொடர்பான செய்திகள் :