புதிய தலைமைச் செயலக கட்டட முறைகேடு தொடர்பான வழக்கு லஞ்ச ஒழிப்புத்துறைக்கு மாற்றம்

Home

shadow


புதிய தலைமைச் செயலக கட்டட முறைகேடு தொடர்பான வழக்கு லஞ்ச ஒழிப்புத்துறைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

புதிய தலைமை செயலகம் கட்டியதில் முறைகேடுகள் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து விசாரிக்க கடந்த 2011ஆம் ஆண்டு நீதிபதி ரகுபதி தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது. இதற்கு எதிராக மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, ஸ்டாலின், துரைமுருகன் ஆகியோர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் பல்வேறு கேள்விகளை எழுப்பிய நிலையில், ரகுபதி தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, புதிய தலைமைச் செயலகம் கட்டியதில் நடந்த முறைகேடு குறித்த வழக்கை லஞ்ச ஒழிப்புத் துறைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கு தொடர்பான உத்தரவு நாளை பிறப்பிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர்

இது தொடர்பான செய்திகள் :