உத்தித பத்மாசனம்

Home

shadow

செய்முறை

1.       தரை விரிப்பில் பத்மாசனத்தில் அமர வேண்டும்.

2.       உள்ளங்கைகளை இரண்டு தொடைப்பகுதிக்கு பக்கத்தில் ஒட்டியவாறு கீழே வைக்க வேண்டும்.

3.       மூச்சை இழுத்துக் கொண்டே, புட்டப்பகுதியை முழங்கை வரை உயர்த்த முயற்சி செய்ய வேண்டும்.

4.       இந்நிலையில் முதுகுத்தண்டு நேராக இருக்க வேண்டும்.

5.       சிறிது நேர ஆழ்ந்த சுவாசத்திற்கு பின், ஆசனத்தை விலக்கி சாதாரண நிலைக்கு வரவும்.

6.       பின் கால்களை மாற்றி செய்ய வேண்டும்.

7.       நான்கு முறை செய்யலாம். ஒவ்வொரு முறையும், 30 வினாடி முதல், 45 வினாடிகள் வரை செய்ய முயற்சி செய்ய வேண்டும்.

பயன்கள் :

1.       தோள்பட்டை, மணிக்கட்டு, முதுகு மற்றும் அடிவயிற்று தசைகள் பலமடையும்

2.       ஜீரண சக்தி நன்கு இருக்கும்.

3.       குடல் இறக்கம், வாயுத் தொல்லை தடுக்கப்படும்

4.       கைகளுக்கு நன்கு பலம் கிடைக்கப்படும்.


 

இது தொடர்பான செய்திகள் :