காக்கைக்காகா கூகை
கூகைக்காகா காக்கை
கோக்குகூ காக்கைக்குக்
கொக்கொக்க கைக்கைக்குக்
காக்கைக்குக் கைக்கைக்கா கா
- காளமேகப் புலவர்
விளக்கம்:
காக்கைக்காகா கூகை = காக்கைக்கு ஆகா கூகை = கூகையை(ஒரு வகை ஆந்தை) இரவில் வெல்லுவது காக்கையால்
ஆகாது.
கூகைக்காகா காக்கை = கூகைக்கு ஆகா காக்கை = பகலில் கூகையால் காக்கையை வெல்வதற்கு முடியாது. ஆகாத
காரியம்.
கோக்கு கூ காக்கைக்கு
கோ = மன்னன்; கோக்கு = மன்னனுக்கு
கூ = புவி
காக்கைக்கு = காப்பதற்கு
கொக்கொக்க = கொக்கு ஒக்க = கொக்கைப் போன்று தகுந்த சமயம் வரும் வரை
காத்திருக்கவேண்டும். இல்லையெனில்,
கைக்கைக்கு = பகையை எதிர்த்து
காக்கைக்கு = காப்பாற்றுதல்
கைக்கைக்காகா = கைக்கு ஐக்கு ஆகா=(தகுந்த சமயமில்லாது போனால்) திறமைமிக்க தலைவனுக்கும்
கைக்கு எட்டாது போய்விடும்.
பொருள்:
தகுந்த
சமயமும் வாய்ப்பும் பார்த்து,
வாய்ப்புகளை நழுவ விடாது செயலாற்ற வேண்டும்.