கோவை - பழங்கால அம்மன் சிலை கண்டுபிடிப்பு

Home

shadow


       கோவையில் தனியார் நிலம் ஒன்றில் வீடு கட்டுவதற்காக அஸ்திவாரம் தோண்டியபோது பழங்கால அம்மன் சிலை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.

கோவை ரத்தினபுரியை அடுத்த கண்ணப்ப நகர் பகுதியில் உள்ள அருள்மிகு முத்துக்கண் மாரியம்மன் கோவில் அருகே அதே பகுதியைச் சேர்ந்த முத்துராஜ் என்பவருக்கு சொந்தமான காலி வீட்டு மனை ஒன்று இருந்தது. இந்த நிலையில் அந்தக் காலி இடத்தில் வீடு கட்டுவதற்காக முத்துராஜ் அஸ்திவாரம் தோண்டும் பணியில் ஈடுபட்டிருக்கையில் சுமார் 7 அடி ஆழம் தோண்டியபோது புதையுண்ட நிலையில் அம்மன் கல் சிலை ஒன்று இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த சிலையை பாதுகாப்பாக அங்கிருந்து வெளியே எடுத்த முத்துராஜ் உடனடியாக ரத்தினபுரி காவல் நிலையத்துக்கும் வருவாய்த்துறையினருக்கும் தகவல் அளித்துள்ளார்.கோவில் அருகே 7 அடி ஆழத்தில் அம்மன் சிலை கண்டெடுக்கப்பட்ட தகவல் அப்பகுதி மக்களிடையே பரவியதை அடுத்து உடனடியாக அங்கு திரண்ட பொதுமக்கள் மற்றும் கோவில் பூசாரி உள்ளிட்டோர் அம்மன் சிலைக்கு பல்வேறு அபிஷேகங்கள் செய்து மாலையிட்டு பூஜை செய்தனர். பின்னர் அங்கு வந்த கோவை வடக்கு வட்டாட்சியர் தலைமையிலான வருவாய்த்துறை அதிகாரிகளிடம் கற்சிலையை ஒப்படைத்தனர். 

இது தொடர்பான செய்திகள் :