தமிழகத்தில் ஊழலற்ற ஆட்சி அமைக்க வேண்டும் – பொன்.ராதாகிருஷ்ணன்

Home

shadow


        தமிழகத்தில் ஊழலற்ற ஆட்சி அமைக்க வேண்டும் என்பதே பாரதிய ஜனதாவின் நிலைப்பாடு என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்ஆதார் அட்டை பயன்படுத்துவது குறித்த உச்ச நீதிமன்ற தீர்ப்பு வரலாற்று சிறப்பு வாய்ந்தது எனவும், இதன் மூலம் அரசின் மீது சுமத்தப்பட்டிருந்த பழி நீங்கியுள்ளது எனவும் தெரிவித்தார். மேலும், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 350 இடங்களில் பாரதிய ஜனதா வெற்றி பெற்று வலுவான ஆட்சியை அமைக்கும் எனவும்தமிழகத்தில் ஊழலற்ற ஆட்சி அமைக்க வேண்டும் என்பதே பாரதிய ஜனதாவின் நிலைப்பாடு எனவும் அவர் குறிப்பிட்டார். திருப்பரங்குன்றம் திருவாரூர் இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து தமிழக பாரதிய ஜனதா விரைவில் முடிவெடுக்கும் எனவும் பொன்.ராதா கிருஷ்ணன் தெரிவித்தார்.

இது தொடர்பான செய்திகள் :