தமிழ்ச்சுவை

Home

shadow


பூனைக்கி யாறுகால் புள்ளினத்துக் கொன்பதுகால்

ஆனைக்குக் கால்பதி னேழானதே –மானேகேள்

முண்டகத்தின் மீது முழுநீலம் பூத்ததுண்டு

கண்டதுண்டு கேட்டதில்லை காண் .  

 

பூனைக்கு 6 கால், புள்-இனத்துக்கு 9 கால், யானைக்கு 17 கால் என்று இல்லாததைச் சொல்லி இருப்பதை உறுதிப்படுத்தியது.

 

பூ(ன்) நக்கி ஆறு கால் = பூ நக்கி உண்ணும் தேனீக்கு ஆறு கால்

புள்ளினத்துக்கு ஒன்பது கால் = புள்ளினத்துக்கு இரண்டேகால்  


ஆனைக்குக் கால் பதினேழ் ஆனதே = யானைக்கு நாலே கால் ஆனதே   


முண்டு அகத்தின் மீது முழு நீலம் பூத்தது உண்டு = ஒளி முன் அமர்ந்துகொண்டு கண்ணை மூடித் தவம் செய்தால் அகத்தில் (உள்ளே) நீலநிலம் பூக்கும். 


முண்டகம் என்னும் செந்தாமரை மேல் நீலமலர் பூத்தது சிவன் நிறம் சிவப்பு. பார்வதி நிறம் நீலம்.


கண்டது உண்டு கேட்டது இல்லை காண்  = இவற்றை எண்ணிப் பார்த்துக் கண்டது உண்டு.

  

 

 

 

 

இது தொடர்பான செய்திகள் :