நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற் கொள்ளையர்கள் மீண்டும் தாக்குதலில் ஈடுப்பட்டனர்.

Home

shadow

 

         நாகை அருகே உள்ள செருதூர் மீனவ கிராமத்தை சேர்ந்த தமிழ்செல்வன், கந்தவேல்  முருகானந்தம் ஆகியோர்  கடலுக்குச் சென்றனர். கோடியக்கரை அருகே படகில் வந்த 5 பேர், அவர்கள் மீது திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் தமிழ்ச்செல்வனுக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. மற்ற இருவரும்   உருட்டு கட்டையால் தாக்கப்பட்டனர். மேலும், மீன் பிடி வலை, திசை காட்டும் கருவி, மற்றும்  செல்போன் உள்ளிட்டவற்றையும்  பறித்துச் சென்றுள்ளனர்காயமடைந்த மீனவர்கள்  நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். நேற்றும் இதேபோல் நாகை மீனவர்கள் 5 பேர், இலங்கை கடற் கொள்ளையர்களால் தாக்கப்பட்டனர். தொடரும் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தும், மத்திய, மாநில அரசுகள் உரிய பாதுகாப்பு வழங்க வலியுறுத்தியும் வரும் 3-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக நாகை மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான செய்திகள் :