ரா விவகாரத்தில் இலங்கை அரசு மறுப்பு தெரிவித்துள்ளது

Home

shadow


     இந்திய உளவு அமைப்பான 'ரா' தன்னைக் கொல்ல முயற்சித்ததாக அதிபர் மைத்ரிபால சிறீசேனா கூறவில்லை என்று இலங்கை அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.

அண்மையில் நடந்த இலங்கை அமைச்சரவை கூட்டத்தில் பேசிய அந்நாட்டு அதிபர் சிறிசேனா, இந்திய உளவு அமைப்பான ரா  தன்னைக் கொலை செய்யத் திட்டமிட்டுள்ளதாகவும் ஆனால் இது குறித்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு தெரியாது என்று பேசியதாகத் தகவல் வெளியானது.  இந்த தகவலானது இந்திய - இலங்கை அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இந்த தகவலை இலங்கை அரசு மறுத்துள்ளது. கொழும்புவில் செய்தியாளர்களிடம் பேசிய இலங்கை சுகாதாரத்துறை அமைச்சர்  ராஜித சேனாரத்ன, 'ரா' தன்னைக் கொல்ல முயற்சித்ததாக அதிபர் சிறிசேனா அமைச்சரவைக் கூட்டத்தில் பேசியதாக வெளியாகியுள்ள தகவல் தவறானது என்றார். 'ரா' உளவாளி ஒருவரை இலங்கை கைது செய்ததாக கூறி, இரு நாடுகள்  இடையே பிரச்சினை ஏற்படுத்த முயற்சி நடப்பதாக மட்டுமே அதிபர் பேசியதாகவும் அமைச்சர் சேனாரத்னா கூறியுள்ளார்.

இது தொடர்பான செய்திகள் :