திருப்பதி – 3-வது மாடியில் இருந்து தவறி விழுந்த சிறுமி உயிரிழப்பு

Home

shadow


         திருப்பதி ஏழுமலையான் கோவில் அருகே தலைமுடி காணிக்கை செலுத்தும் கல்யாண கட்டாவின் மூன்றாவது மாடியில் இருந்து தவறி விழுந்து 6 வயது சிறுமி உயிரிழந்தார்.

கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த சந்திரகாந்த்- துர்காதேவி தம்பதியினர் தனது 6 வயது மகள் சந்திரிகாவுடன் திருமலையில் தங்கி ஹோட்டலில் பணிபுரிந்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக சந்திரகாந்த் துர்க்காதேவியும் திருமலையில் பணிபுரிந்து வரும் நிலையில் இன்று காலை திருமலையில் உள்ள பக்தர்கள் மொட்டை அடித்து தலைமுடி காணிக்கை செலுத்தும் கல்யாண கட்டா அருகே சந்திரிகா விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது விளையாடிக்கொண்டே  கல்யாண கட்டாவின் மூன்றாவது மாடியில் இருந்து கால் தவறி சந்திரிகா கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.  உடனடியாக அங்கிருந்து  ஆம்புலன்சில் சந்திரிகாவை திருமலையில் உள்ள அஸ்வினி மருத்துவமனைக்குக் கொண்டு வந்தனர் . அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து திருமலை முதலாவது நகர காவல்நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இது தொடர்பான செய்திகள் :