அனைத்து பள்ளிகளிலும் 25 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் திட்டத்தை அமல்படுத்த, மத்திய அரசு ஆலோசனை

Home

shadow

                      பொருளாதார ரீதியில் நலிவடைந்த குடும்பங்களைச் சேர்ந்த  குழந்தைகளுக்கு, அனைத்து பள்ளிகளிலும், பன்னிரெண்டாம் வகுப்புவரை  25 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் திட்டத்தை அமல்படுத்த, மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.

 நாடாளுமன்றத்தில் நடைபெற்ற குளிர்கால கூட்டத்தொரில் பொதுப்பிரிவில், வேலை, கல்வியில், 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் சட்டத்தை, மத்திய அரசு இயற்றியது. இதனை தொடர்ந்து கல்வி தொடர்பான மற்றொரு திட்டத்தை அமல்படுத்துவதுகுறித்து, மத்தியஅரசு தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது. இதுகுறித்து, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் கல்வித்துறை ஆர்வலர், அசோக் அகர்வாலுக்கு, கடிதம் எழுதியுள்ளது. அதில் குழந்தைகளுக்கு கட்டாய கல்வி உரிமை சட்டத்தை விரிவுபடுத்தும் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், இந்ததிட்டத்தை, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் பரிசீலித்துவருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்ததிட்டம்முழுமையாக ஆய்வுசெய்யப்பட்டு, அமல்படுத்தப் படலாம் எனவும் அவ்வாறு முடிவு எடுக்கப்படும் பட்சத்தில், அதுபற்றிதகவல் தெரிவிக்கப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது, குழந்தைகளுக்கான கட்டாய கல்வி உரிமை சட்டம், 6 முதல் 14 வயதுக்குஉட்பட்ட குழந்தைகளுக்கு, 1 முதல்  8ஆம் வகுப்புவரை கட்டாய கல்வி கற்கவகை செய்கிறது. மேலும் சிறுபான்மை கல்விமையங்கள் தவிர, அனைத்து அரசு மற்றும் தனியார் கல்விமையங்களில் இந்தசட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதனை தொடர்ந்து கட்டாயகல்வி உரிமை சட்டத்தின் கீழான இந்ததிட்டத்தை, பிளஸ் 2 வரைவிரிவுபடுத்தி, 25 சதவீத இடஒதுக்கீடாக, மத்திய அரசு உயர்த்தும் என, எதிர்பார்க்கப்படுகிறது.           

இது தொடர்பான செய்திகள் :