உலக பொருளாதாரத்தை விட இந்தியாவின் பொருளாதாரம் வேகமாக வளர்ந்துள்ளது - வெங்கையா நாயுடு

Home

shadow


உலக பொருளாதாரத்தை விட இந்தியாவின் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருவதாக குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு பெரிமிதம் தெரிவித்துள்ளார்.


அமெரிக்காவில் வசித்து வரும் தெலுங்கு பேசும் மக்களை ஒருங்கினைக்கும் வகையில், அமெரிக்காவின் சிகாகோ நகரில் சிறப்பு நிகழ்ச்சி ஒன்றிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 


இந்த நிகழ்ச்சியில் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு  சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.


 நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்தியாவின் வளர்ச்சியை அனைத்து நாடுகளும் உற்று நோக்கி வருவதாகவும், இந்தியாவில் முதலீடு செய்ய பலரும் ஆர்வம் கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.


 மேலும், உலக பொருளாதாரம் சரிந்துக் கொண்டிருக்கும் தற்போதைய நிலையிலும், இந்திய பொருளாதாரம் வளர்ந்து கொண்டிருப்பதாக பெரிமிதம் தெரிவித்தார்.

இது தொடர்பான செய்திகள் :