குடியரசு தின விழாவை முன்னிட்டு ஓச்சேரியில் நடைப்பெற்ற கிராம சபா கூட்டம்

Home

shadow

                              குடியரசு தின விழாவை முன்னிட்டு ஓச்சேரியில் நடைப்பெற்ற  கிராம சபா கூட்டத்தில்  மாவட்ட ஆட்சியர் ராமன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

வேலூர் மாவட்டம் காவேரிப்பாக்கம் அருகேயுள்ள   ஓச்சேரி   ஆயர்ப்பாடி கிராமத்தில் 70-ஆவது குடியரசு தின விழாவினை முன்னிட்டு கிராம சபைக்கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் வேலூர் மாவட்ட ஆட்சியர் இராமன் கலந்து கொண்டு உரையாற்றினார். இதில் கிராமத்தின் வரவு செலவு கணக்குகளையும் நிதி இருப்பையும், கூட்டத்தில் பங்கேற்ற நூற்றுக்கணக்கான கிராம மக்கள் முன்னிலையில் வாசித்த அவர் அரசு அதிகாரிகள்  செயல்படுத்தப்படவுள்ள வளர்ச்சிக்கான திட்டங்கள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தனர்.இதுமட்டுமன்றி கிராமத்தின் வளர்ச்சிக்கு தேவைப்படும் வசதிகள் பற்றியும், மக்களின் குறைகளையும் பொதுமக்களிடம் கேட்டதை தொடர்ந்து கிராம மக்களின் கோரிக்கை மனுக்களை  மாவட்ட ஆட்சியர் திரு.இராமன் பெற்றுகொண்டு குறைகளை களைய உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்

இது தொடர்பான செய்திகள் :