சர்வதேச அளவில் பொருளாதாரத்தில் மிக பெரிய எதிர்மறை தாக்கம் ஏற்பட வாய்ப்பு - சர்வதேச செலாவணி நிதியம் எச்சரிக்கை

Home

shadow

          எதிர்பார்த்த அளவு வளர்ச்சி இல்லாததால் சர்வதேச அளவில் பொருளாதாரத்தில் மிக பெரிய எதிர்மறை தாக்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக சர்வதேச செலாவணி நிதியம் உலக நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து பேசியுள்ள சர்வதேச செலாவணி நிதியத்தின் தலைவர் கிறிஸ்டின் லகார்டே, எதிர்பார்த்ததை விட பொருளாதார வளர்ச்சி குறைவாக இருப்பதாகவும், இதன் காரணமாக சர்வதேச அளவில் பொருளாதாரத்தில் மிக பெரிய எதிர்மறையான தாக்கம் ஏற்படும் என தெரிவித்துள்ளார். இதற்கு மிக முக்கிய காரணிகளாக் நான்கு விஷயங்களை லகார்டே குறிப்பிட்டுள்ளார். வர்த்த போர் மற்றும் வரி உயர்வு, வர்த்தக இறுக்கம், பிரெக்சிட் பிரச்சனை மற்றும் சீன பொருளாதார வீழ்ச்சி போன்றவை சர்வதேச அளவில் மிகபெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என லகார்டே தெரிவித்துள்ளார். எதிர்பார்த்த அளவு வளர்ச்சி இல்லாததால், சர்வதேச பொருளாதார வளர்ச்சி இலக்கை  3 புள்ளி 7 சதவீதத்தில் இருந்து 3 புள்ளி 5 சதவீதமாக கடந்த மாதம், சர்வதேச நாணயம் குறைத்தது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பான செய்திகள் :