தங்கத்தின் விலை இன்று மீண்டும் உயர்வு

Home

shadow

            நேற்று சற்று குறைந்திருந்த தங்கத்தின் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளது.

கடந்த இரண்டு வாரங்களாக தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வந்த தங்கத்தின் விலையானது நேற்று சற்று குறைந்தது. சவரனுக்கு 400 ரூபாய்க்கும் மேல் தங்கத்தின் விலை குறைந்ததால், வாடிக்கையாளர்கள் சற்று மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில் இன்று தங்கத்தின் விலையானது மீண்டும் ஏற்றம் கண்டுள்ளது. 22 காரட் ஆபரண தங்கமானது சவரனுக்கு 320 ரூபாய் உயர்ந்து 28 ஆயிரத்து 944 ரூபாய்க்கு விற்பனைகிறது. ஒரு கிராம் தங்கம் விலை 40 ரூபாய் உயர்ந்து, 3 ஆயிரத்து 618-க்கு விற்பனையாகிறது. இதேப்போல் வெள்ளியின் விலை கிராமுக்கு 80 காசுகள் உயர்ந்து, 48 ரூபாய் 70 காசுகளுக்கு விற்பனையாகிறது.

இது தொடர்பான செய்திகள் :