அக்டோபர் மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் ஒரு லட்சம் கோடி ரூபாய் தாண்டியுள்ளது - அருண் ஜேட்லி

Home

shadow

 

அக்டோபர் மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் ஒரு லட்சம் கோடி ரூபாயை தாண்டியுள்ளதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், 2018 அக்டோபரில்ஜிஎஸ்டி வசூல் ஒரு லட்சம் கோடியை கடந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். குறைந்த வட்டி, குறைந்த வரி ஏய்ப்பு, வரி செலுத்துவோர் எண்ணிக்கை அதிகரிப்பு ஆகியவை ஜிஎஸ்டியின் வெற்றிக்கு காரணம் என்றும் அவர் கூறியுள்ளார். நடப்பு நிதியாண்டில் ஜிஎஸ்டி வசூல் ஒரு லட்சம் கோடி ரூபாயை எட்ட வேண்டும் என நிதித்துறை அமைச்சகம் இலக்கு நிர்ணயித்திருந்தது. இதன்படி நடப்பு நிதியாண்டின் ஜிஎஸ்டி வசூல் மே மாதத்தில் 94 ஆயிரத்து 16 கோடியாகவும், ஜூன் மாதத்தில் 95 ஆயிரத்து 610 கோடியாகவும், ஜூலை மாதத்தில் 96 ஆயிரத்து 483 கோடியாகவும், ஆகஸ்ட் மாதத்தில் 93 ஆயிரத்து 960 கோடியாகவும், செப்டம்பரில் 94 ஆயிரத்து 442 கோடி ரூபாயாகவும் இருந்தது நினைவுகூரத்தக்கது.

இது தொடர்பான செய்திகள் :