அடுத்த ஆண்டு முதல் இந்தியாவின் ஏற்றுமதியை மேம்படுத்தும் வகையில் வர்த்தக கொள்கைகள் செயல்பாட்டிற்கு வரும் - சுரேஷ் பிரபு

Home

shadow

               அடுத்த ஆண்டு முதல் இந்தியாவின் ஏற்றுமதியை மேம்படுத்தும் வகையில், இந்திய பொருட்களை இறக்குமதி செய்யும் ஒரு சில நாடுகளுக்கு ஏற்ற வகையில் வர்த்தக கொள்கைகள் செயல்பாட்டிற்கு வரும் என மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர், சுரேஷ் பிரபு தெரிவித்தார்.

 


இது குறித்து பேசிய அவர், கடந்த, 14 மாதங்களாக,நாட்டின் ஏற்றுமதி, மிகச் சிறப்பாக இருந்தபோதிலும், அதில் முழு திருப்தி இல்லை எனவும், நாடு வளர்ச்சி அடைய, ஏற்றுமதி துறை உதவ வேண்டும் என்பதே தன் எண்ணம் என்றும் தெரிவித்தார். சர்வதேச அளவில் தேவைப்பாடு குறைந்து, கடன் சந்தை நெருக்கடி போன்ற காரணங்களால், அடுத்த ஆண்டு, சர்வதேச ஏற்றுமதி வளர்ச்சி மந்தமடையும் என, உலக வர்த்தக அமைப்பு கணித்துள்ளதாக தெரிவித்த அவர், இத்தகைய சவால்களை சமாளிக்க, ஏற்கனவே ஏற்றுமதியை மேம்படுத்த எடுத்த நடவடிக்கைகளுடன், புதிய உத்திகளை இணைத்து, செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அதற்கான கொள்கைகள் உருவாக்கப்பட்டு வருவதாகவும், அதன்படி, குறிப்பிட்ட நாடுகளுக்கு ஏற்ற, கொள்கை திட்டங்கள், அடுத்த ஆண்டு அமலுக்கு வரும் என்றும் தெரிவித்தார். ஆப்ரிக்க கண்டத்தில் ஏராளமான ஏற்றுமதி வாய்ப்புகள் உள்ளதால் ஆப்ரிக்காவுக்கு என, தாராள வர்த்தக ஒப்பந்தம் போன்ற கொள்கைகள் உருவாக்கப்படும் என்றும், லத்தீன் அமெரிக்கா உட்பட, பிற பிராந்தியங்களுக்கும் திட்டங்கள் உள்ளதாகவும் தெரிவித்தார். சேவைகள் துறையின் ஏற்றுமதியை மேம்படுத்த, 5 ஆயிரம்  கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், இதில், தகவல் தொழில்நுட்பம், சுற்றுலா, விருந்தோம்பல் உள்ளிட்ட, 12 பிரிவுகளின் ஏற்றுமதியை அதிகரிக்க, அதிரடி செயல் திட்டத்திற்கு, ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது எனவும் கூறினார்.

இது தொடர்பான செய்திகள் :