அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு கடும் சரிவைச் சந்தித்துள்ளது

Home

shadow

                  அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு இன்றும் கடும் சரிவைச் சந்தித்துள்ளது. 


அதேநேரத்தில் ரூபாய் மதிப்பு வீழ்ச்சி குறித்து பீதியடையத் தேவையில்லை என நீத்தி ஆயோக் துணைத் தலைவர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார்.


பொருளாதார வல்லரசு நாடுகளான அமெரிக்கா மற்றும் சீனா இடையே வர்த்தகத்தில் ஏற்பட்டுள்ள கடும் போட்டி உலக நாடுகளின் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. 


இதனாலும் கச்சா எண்ணெய் விலை உயர்வாலும் அமெரிக்க டாலருக்கான தேவை அதிகரித்து வருகிறது. 


இதன் காரணமாக, அமெரிக்க டாலருக்கு நிகரான பல்வேறு நாட்டுச் செலாவணிகளின் மதிப்பு, சரிவைச் சந்தித்து வருகிறது. 


இதன் ஒரு பகுதியாக இந்திய ரூபாய் மதிப்பும் தொடர்ந்து சரிவடைந்து வருகிறது. இந்நிலையில் அன்னியச் செலாவணிச் சந்தையில் இதுவரை இல்லாத அளவுக்கு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, நேற்று 71 ரூபாய் 21 பைசா என்ற கடும் சரிவை சந்தித்தது. 


இந்தச் சரிவு இன்றும் நீடிக்கிறது. அன்னியச் செலாவணிச் சந்தையில் இன்றைய வர்த்தக நேரத் தொடக்கத்தில் ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சியடைந்து 71 ரூபாய் 33 பைசாவாகச் சரிந்தது. 


இதனிடையே ரூபாய் மதிப்பு சரிவு குறித்து பீதியடையத் தேவையில்லை என மத்திய கொள்கைக் குழுவான நீத்தி ஆயோக்கின் துணைத் தலைவர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார். 


சர்வதேசப் பிரச்னைகள் காரணமாக ஏற்பட்டுள்ள இந்தச் சரிவு விரைவில் சீரடைந்து, இந்திய ரூபாய் அதன் உண்மையான மதிப்பை எட்டும் என்றும் அவர் கூறியுள்ளார். 


டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு, கடந்த மூன்றாண்டுகளில் 17 சதவீதம் உயர்வடைந்திருந்த நிலையில், கடந்த ஓராண்டாக 10 சதவீத சரிவைத்தான் சந்திதித்துள்ளது என்றும் ராஜீவ் குமார் சுட்டிக்காட்டியுள்ளார். 

இது தொடர்பான செய்திகள் :