அரசு ஊழியர்கள் ரத்ததானம் - மத்திய அரசு விடுமுறை.

Home

shadow

மத்திய அரசு ஊழியர்கள் ரத்த தானம் அளித்தால் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

       இது தொடர்பாக மத்திய பணியாளர்கள் நல அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  ரத்த தானம் அல்லது ரத்தக் கூறுகள் தானம் அளிப்பதற்கு சிறப்பு தற்செயல் விடுப்பை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  அங்கீகரிக்கப்பட்ட ரத்த வங்கிகளில் ரத்த தானம் அல்லது

          ரத்தக் கூறுகளை தானம் அளிக்கும் நாளன்று,  ஊழியர்கள் சம்பளத்துடன் கூடிய விடுமுறையாக எடுத்துக் கொள்ளலாம்  என்றும் ஆண்டுக்கு இது போல் 4 நாட்கள் விடுமுறை எடுத்துக் கொள்ளலாம் என்றும் கூறியுள்ளது. ரத்ததானம் வழங்கியதற்கான தகுந்த ஆதாரங்கள் தாக்கல் செய்யப்பட வேண்டியது அவசியம் என்றும் மத்திய பணியாளர்கள் நல அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பான செய்திகள் :