ஆந்திர ராஜமுந்திரி - யங்கர கதிர்வீச்சு சக்தியுடன் கூடிய நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள எந்திரம் மாயம்

Home

shadow

            ராஜமுந்திரி அருகே இருக்கும் பொம்மூர் ஒ.என்.ஜி.சி அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த பயங்கர கதிர்வீச்சு சக்தியுடன் கூடிய நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள எந்திரம் மாயமான சம்பவ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் ராஜமுந்திரி அருகே இருக்கும் பொம்மூர் பகுதியில் ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு சொந்தமான அலுவலகம் உள்ளது.கிழக்கு மற்றும் மேற்கு கோதாவரி ஆகிய மாவட்ட கடற்பகுதிகளில் எண்ணெய் வளத்தை கண்டுபிடிப்பதற்காக அந்த அலுவலகத்தில் நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள ஆய்வு இயந்திரம் வைக்கப்பட்டிருந்தது.கடலுக்கு அடியில் இருநூறு மீட்டர் ஆழம் வரை பூமியில் துளையிட்டு சென்று 360 டிகிரி சுற்றளவில் கதிர்வீச்சுகளை ஏற்படுத்தி அதன்மூலம் எண்ணெய் வளத்தை கண்டுபிடிக்கும் சக்தியுடைய அந்த எந்திரத்தை காணவில்லை என்று ஓஎன்ஜிசி அதிகாரிகள் பொம்மூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து போலிசார் வழக்குபதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது தொடர்பான செய்திகள் :