ஆன்லைன் விற்பனை நிறுவனங்களுக்கு புதிய அதிரடி கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்துள்ளது

Home

shadow

                  ஆன்லைன் விற்பனை நிறுவனங்களுக்கு புதிய அதிரடி கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்துள்ளது.


அந்நிய நேரடி முதலீட்டைப் பெற்று செயல்படும் ஆன்லைன் விற்பனை நிறுவனங்களுக்கான திருத்தப்பட்ட விதிகளை மத்திய வர்த்தகத் துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டது
. அதன்படி, இந்த நிறுவனங்கள் தங்களிடம் உள்ள அனைத்து விற்பனையாளர்களுக்கும் பாரபட்சம் இல்லாமல் சேவை அளிக்க வேண்டும், தங்களிடம் மட்டுமே ஒரு நிறுவனத்தின் குறிப்பிட்ட பொருள் கிடைக்கும் என்ற நிலையை உருவாக்கி, அதிக விலையை நிர்ணயிக்கக் கூடாது, ஒரு விற்பனையாளர் தன்னிடம் உள்ள பொருள்களில் 25 சதவீதத்தை மட்டுமே ஆன்லைன் நிறுவனங்கள் மூலம் விற்க வேண்டும், தாங்கள் மட்டுமே ஒரு குறிப்பிட்ட பொருள் விற்பனை செய்கிறோம் என்பது போன்ற நிலையை ஏற்படுத்தக் கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த புதிய விதிகள் வரும் பிப்ரவரி மாதம் முதல் அமலுக்கு வர இருக்கின்றன. அந்நிய நேரடி முதலீடு இல்லாமல் உள்நாட்டு நிதியில் செயல்படும் ஆன்லைன் விற்பனை நிறுவனங்களின் நலன்களைக் காக்கும் வகையில் இந்த நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது

இது தொடர்பான செய்திகள் :