இந்திய மீனவர்கள் 12 பேரை பாகிஸ்தான் கடலோர காவல் படையினர் கைது

Home

shadow

 

       எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக கூறி இந்திய மீனவர்கள் 12 பேரை பாகிஸ்தான் கடலோர காவல் படையினர் கைது செய்துள்ளனர்.

இது குறித்து பேசிய பாதுகாப்பு துறை அதிகாரி ஒருவர், அரபிக் கடல் பகுதியில் சிந்து மாகாணத்திற்கு அருகே கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த இந்திய மீனவர்கள் 12 பேரை எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக கூறி பாகிஸ்தான் கடலோர காவல் படையினர் கைது செய்ததாக தெரிவித்தார். மேலும், மீனவர்கள் சென்ற 2 படகுகளையும் பாகிஸ்தான்  அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் அனைவரும் கராச்சி காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டிருப்பதாகவும், அவர்கள் மீது சட்ட விரோதமாக பாகிஸ்தானிற்குள் நுழைந்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான செய்திகள் :