இந்திய வங்கிகளில் 41 ஆயிரத்து 167 கோடி ரூபாய் அளவுக்கு பணம் மோசடி - ரிசர்வ் வங்கி

Home

shadow

                             2017 முதல் 2018-ஆம் ஆண்டிற்கு இடைப்பட்ட காலத்தில் இந்திய வங்கிகளில் 41 ஆயிரத்து 167 கோடி ரூபாய் அளவுக்கு பணம் மோசடி செய்யப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், 2016-17-ஆம் ஆண்டில் 23 ஆயிரத்து 933 கோடி ரூபாயாக இருந்த வங்கி பண மோசடி இந்த ஆண்டு 72 சதவீதம் உயர்ந்து 41 ஆயிரத்து 167 கோடி ரூபாயாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடன் பெற்றுக் மோசடி, செக் மோசடி, ஆன் லைன் பரிவர்த்தனை மோசடி என பல்வேறு வழிகளில் வங்கிகளிடம் இருந்து இந்த பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக 5 ஆயிரத்து 917 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதிலும் குறிப்பாக இணைய வழி மோசடி தொடர்பாக 2 ஆயிரத்து 59 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த ஆண்டு நடைபெற்ற வங்கி மோசடிகளில் 80-க்கும் மேற்பட்ட மோசடி சம்பவங்கள் 50 கோடி ரூபாய் அல்லது அதற்கு மேலாக பெற்ற கடன்களின் மூலம் நடைபெற்றுள்ளது. ஆண்டுக்கு ஆண்டு கடன் மோசடி அதிகரித்து வருவதாகவும், இதனை தடுக்க வங்கிகள் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது

இது தொடர்பான செய்திகள் :