இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள், கடந்த டிசம்பர் மாதம் மட்டும், 1 லட்சத்து 98 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஏற்றுமதி

Home

shadow

                இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள், கடந்த டிசம்பர் மாதம் மட்டும், 1 லட்சத்து 98 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக, மத்திய வணிகம் மற்றும் தொழில் துறை தெரிவித்துள்ளது.


இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களின் பட்டியல், எந்தெந்த நாடுகளுக்கு, எவ்வளவு ஏற்றுமதி செய்யப்படுகிறது என்ற விபரம், மாதந்தோறும், மத்திய வணிகம் மற்றும் தொழில் துறை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். தற்போது, டிசம்பர் மாதம் ஏற்றுமதி குறித்த விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி இந்தியாவிலிருந்து, ஆஸ்திரேலியா, ஆஸ்திரியா, ரஷ்யா, சிங்கப்பூர் உட்பட, மொத்தம், 240 நாடுகளுக்கு பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதில், முக்கிய பொருட்களாக, டீ, காபி துாள், சர்க்கரை, முந்திரி, அரிசி, கோதுமை, பால் பொருட்கள் என, 100க்கும் மேற்பட்ட பொருட்கள் இடம்பெற்றுள்ளன. கடந்த ஆண்டு டிசம்பரில் மட்டும், இந்திய ஏற்றுமதியின் மதிப்பு, 1 லட்சத்து 98 ஆயிரம் ரூபாயாக உள்ளது. இது, 2017 ஆம் ஆண்டு டிசம்பரில், 1 லட்சத்து 78 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்த்து. இதில், ஏற்றுமதியின் வளர்ச்சி, 10 சதவீதம் உயர்ந்துள்ளது. இதே போன்று கடந்த ஆண்டு, ஏப்ரல் , முதல் டிசம்பர் வரையிலான, இந்திய ஏற்றுமதியின் மதிப்பு, 17 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. இதுவே, 2017 ஆம் ஆண்டில், 14 லட்சத்து 36 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்தது. இதில், ஏற்றுமதியின் வளர்ச்சி, 18 புள்ளி 43 சதவீதமாக உயர்ந்துள்ளது. 

இது தொடர்பான செய்திகள் :