இந்தியாவில் கிளை தொடங்க போட்டி போடும் உலக நாடுகள்

Home

shadow

         பேங்க் ஆஃப் சீனா வங்கியின் கிளையை இந்தியாவில் தொடங்க மத்திய ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி கடந்த மாதம் சீனாவுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்தபோது சீன அதிபர் ஜீ ஜின்பிங்கை சந்தித்தார். ஷாங்காய் கூட்டுறவு நிறுவன மாநாட்டுக்கு முன்பான இந்தச் சந்திப்பின்போது இரு நாடுகளுக்கு இடையேயான பாதுகாப்பு, பொருளாதாரக் கூட்டுறவு, மக்களுக்கிடையேயான பரிமாற்றம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. அதனுடன் பேங்க் ஆஃப் சீனா வங்கியின் கிளையை இந்தியாவில் தொடங்குவது குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது. இதன்படி 105 வருடப் பழைமைவாய்ந்த இவ்வங்கியின் கிளையை இந்தியாவில் தொடங்குவதற்கான உரிமத்தை ரிசர்வ் வங்கி தற்போது வழங்கியுள்ளது. இவ்வங்கியின் சந்தை மூலதன மதிப்பு 159 பில்லியன் டாலர்களாகும். இதற்கிடையே, ஈரான், தென்கொரியா, மலேசியா, நெதர்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த 7 வங்கிகள் இந்தியாவில் கிளை தொடங்க விண்ணப்பித்துள்ளன.

இது தொடர்பான செய்திகள் :