இந்தியாவுக்கான வர்த்தக முன்னுரிமை அந்தஸ்தை நிறுத்தி வைப்பதால், இந்திய ஏற்றுமதியில் எந்த பாதிப்பும் ஏற்படாது

Home

shadow

          இந்தியாவுக்கான வர்த்தக முன்னுரிமை அந்தஸ்தை நிறுத்தி வைப்பதால், இந்திய ஏற்றுமதியில் எந்த பாதிப்பும் ஏற்படாது என வர்த்தக துறை செயலர் அனுப் வதாவன்  தெரிவித்துள்ளார்.


அமெரிக்க பொருட்களுக்கு இந்தியா அதிக வரி வசூலிப்பதாகவும், சமமான மற்றும் நியாயமான முறையில் இந்திய வர்த்தக சந்தையை அணுக, அமெரிக்காவுக்கு இந்தியா உறுதி அளிக்கவில்லை என்றும் குற்றம் சாட்டிய அமெரிக்க அதிபர் டிரம்ப்இந்தியாவுக்கு அளிக்கப்பட்டு வந்த வர்த்தக் முன்னிரிமை அந்தஸ்தை திரும்பப் பெறப் போவதாக அறிவித்தார். இந்நிலையில், அமெரிக்காவின் இந்த முடிவால், இந்திய ஏற்றுமதியில் எந்த பாதிப்பும் ஏற்பட போவதில்லை என வர்த்தக துறை செயலர் அனுப் வதாவன்  தெரிவித்துள்ளார். வளர்ச்சி மற்றும் மக்கள்நலன் விவகாரங்களில் இந்திய அரசு மிகவும் கவனமுடன் இருப்பதாகவு, மக்கள் நலனில் எந்த சமரசமும் செய்து கொள்ளாமல், மருத்துவ உபகரணங்களை அனைவரும் பெறும் வகையில் நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார். மேலும், இந்தியாவுக்கான வர்த்தக முன்னுரிமை அந்தஸ்தை அமெரிக்கா 60 நாட்களில் திரும்ப பெற உள்ளதாகவும், இந்தியாஅமெரிக்கா இடையே ஆழமான உறவு காணப்படுவதாகவும், வர்த்தக பிரச்னை தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார். இந்தியாவுக்கான வர்த்தக முன்னுரிமை அந்தஸ்தை நிறுத்தி வைப்பதால், இந்திய ஏற்றுமதியில் எந்த பாதிப்பும் ஏற்படாது எனவும் அவர் கூறினார்.

இது தொடர்பான செய்திகள் :