இரவு 8 மணி வரை வங்கிகள்

Home

shadow


 

     வருமான வரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடைவதால் இரவு 8 மணி வரை வங்கிகள் திறந்திருக்க ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

 

வருமானவரித் தாக்கல் செய்வதற்கு இன்று கடைசி நாள் என்பதுடன் நாளை மற்றும் நாளை மறுநாள் விடுமுறையாகும். இதனால் வரி செலுத்துவோர் மற்றும் வாடிக்கையாளர்களின் வசதிக்காக இன்று இரவு 8 மணி வரை வங்கிகள் செயல்பட ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. ரிசர்வ் வங்கியின் அனைத்து கிளைகள் மற்றும், வருமான வரித்துறை அலுவலகங்களும் இரவு 8 மணி வரை திறந்திருக்கும் என்றும் தெரிவித்துள்ளது. எலக்ட்ரானிக் பணபரிமாற்றங்கள் இன்று நள்ளிரவு வரை ஏற்றுக் கொள்ளப்படும் என்றும் ரிசர்வ் வங்கி குறிப்பிட்டுள்ளது.

 

இது தொடர்பான செய்திகள் :