உர்ஜித் படேல்

Home

shadow

 

வங்கி முறையை சுத்தப்படுத்த விஷம் அருந்தவும் தயார் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், வங்கிகளில் நடந்து வரும் மோசடிகளை தடுக்க ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளதாக தெரிவித்தார். வங்கி முறையை சுத்தப்படுத்த விஷம் அருந்தவும் தயார் என்றும் உர்ஜித் படேல் தெரிவித்தார். அதே சமயம் வங்கிகளில் நடைபெறும் மோசடிகளை தடுக்க, வங்கிகளுக்கே அதிக பொறுப்பு உள்ளது என்றார். கண்காணிக்கும் பொறுப்பில் தான் ரிசர்வ் வங்கி இருப்பதாகவும் கூறினார். சுயக் கட்டுப்பாட்டுடன், ஏற்கனவே உள்ள விதிகளின்படி வங்கிகள் செயல்பட்டால், இந்த பிரச்னைகளை சமாளிக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்

இது தொடர்பான செய்திகள் :