ஊதிய உயர்வு தொடர்பாக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருடன், தொழிற்சங்க நிர்வாகிகள் இன்று பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்

Home

shadow

அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கான, 12வது ஊதிய ஒப்பந்தம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் முடிவடைந்தது. இதைதொடர்ந்து நிறைவேற்றப்பட வேண்டிய 13வது ஊதிய ஒப்பந்தம், இதுவரை நிறைவேற்றப்படவில்லை. இதுதொடர்பாக 20 கட்டங்களாக பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. இந்நிலையில், ஊதிய உயர்வு தொடர்பாக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருடன், தொழிற்சங்க நிர்வாகிகள் இன்று பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். இந்த பேச்சுவார்த்தை சென்னை, குரோம்பேட்டை அரசு போக்குவரத்து பணிமனையில், இன்று காலை நடைபெறுகிறது. இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாவிட்டால், போராட்டம் அறிவிக்க தொழிற்சங்கங்கள் முடிவு செய்துள்ளன.

இது தொடர்பான செய்திகள் :