எஸ்.பி.ஐ கடன் வட்டி உயர்வு

Home

shadow


கடன் திட்டங்களுக்கான அடிப்படை வட்டியை பாரத ஸ்டேட் வங்கி உயர்த்தியுள்ளது.

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி கடன் திட்டங்களுக்கான அடிப்படை வட்டியை 20 புள்ளிகள் அளவில்  உயர்த்தியுள்ளது. 6 மாத குறுகிய கால கடன், நீண்ட கால கடன் திட்டங்களுக்கான வட்டியும் உயர்த்தப்பட்டுள்ளது. வீட்டுக்கடன், வாகனக்கடன் என அனைத்தும் அடிப்படை வட்டியை கொண்டே கணக்கிடப்படுவதால், அந்த வட்டி விகிதமும் உயர வாய்ப்பு உள்ளது. மாதம் தோறும் கட்டக்கூடிய தவணை தொகையும் உயரும். இதே போல, பஞ்சாப் நேஷனல் வங்கியும் கடன் திட்டங்களுக்கான அடிப்படை வட்டியை உயர்த்தியுள்ளது.  

இது தொடர்பான செய்திகள் :