ஒட்டு மொத்த சமூகவளைதலங்களின் அரசன் ஆனது ஆப்பிள் நிறுவனம்

Home

shadow

ஆப்பிள் நிறுவன பங்குகள் 207 டாலர்கள் அளவில் அதிகரித்ததைத் தொடர்ந்து, ஆப்பிள் இன்க் நிறுவனத்தின் மதிப்பு ஒரு லட்சம் கோடி டாலர்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது.

 

ப்பிள் இன்க் நிறுவனம் கடந்த பத்து ஆண்டுகளில் ஐபோன் விற்பனை மூலம் தனது உச்ச இலக்கை எட்டியிருக்கிறது. ஆப்பிள் நிறுவன பங்குகள் 2 புள்ளி 8 சதவிகிதம் அதிகரித்து 207.05 டாலர்களில் நிறைவுற்றது. அந்நிறுவனத்தின் ஜூன் மாதம் வரையிலான காலாண்டு வருவாய் அறிக்கை வெளியிடப்பட்டதை தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களாக ஆப்பிள் நிறுவன பங்குகள் அதிகரிக்கத்

தொடங்கின. அமேசான் மற்றும் மைக்ரோசாஃப்ட் போன்ற நிறுவனங்களை பின்னுக்குத் தள்ளி ஒரு லட்சம் கோடி டாலர்கள் என்ற இலக்கை எட்டிய முதல் நிறுவனமாக ஆப்பிள் திகழ்கிறது.

2007-ம் ஆண்டு முதல் ஐபோன் விற்பனை தொடங்கியபோது, ஆப்பிள் நிறுவன பங்குகள் சுமார்  ஆயிரத்து100 சதவீதம் அதிகரிக்கத் தொடங்கியது. 1980-ம் ஆண்டு பங்குச் சந்தையில் இடம்பெற்றதில் இருந்து தற்போது வரை ஆப்பிள் நிறுவனத்தின் பங்கு மதிப்பு 50 ஆயிரம் சதவீதம் அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பான செய்திகள் :