கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இன்று ஒரே நாளில் ஆயிரம் புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சியடைந்த பங்குச் சந்தை

Home

shadow

                        மும்பை பங்குச் சந்தை, கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இன்று ஒரே நாளில் ஆயிரம் புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சியடைந்தது. 


இதேபோல் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பும் இதுவரை இல்லாத வகையில் 74 ரூபாய் 50 பைசாவாகச் சரிவடைந்துள்ளது.


அமெரிக்க பங்குச் சந்தையில் கடந்த பிப்ரவரி மாதம் மிகப் பெரிய அளவில்  பங்குகள் விற்கப்பட்டதன் எதிரொலியாக, ஆசியப் பங்குச் சந்தைகள் கடும் பாதிப்பைச் சந்தித்து வருகின்றன. 


இதன் விளைவாக, கடந்த சில நாட்களாக சரிவையும், உயர்வையும் மாற்றி மாற்றி சந்தித்துவந்த இந்தியப் பங்குச் சந்தை இன்றைய வர்த்தகத் தொடக்கத்தில் மிகப பெரிய வீழ்ச்சியைக் கண்டுள்ளது. 


மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் இன்று ஒரேநாளில் ஆயிரத்து 8 புள்ளிகள் வீழ்ந்துள்ளது. 


கடந்த 2011-ஆம் ஆண்டுக்குப் பிறகு இது மிக அதிக அளவிலான வீழ்ச்சியாகும். இதேபோல் தேசியப் பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டியும் இன்று ஒரே நாளில் அதிகபட்ச அளவாக 316 புள்ளிகள் சரிந்தது. 


வங்கிகள் உட்பட பல்வேறு துறை சார்ந்த நிறுவனப் பங்குகளின் விலையும் இன்று மிகவும் குறைந்துள்ளது. இருப்பினும், ஜெட் விமான எரிபொருள்களுக்கான கலாய் வரியை மத்திய அரசு குறைத்ததன் காரணமாகவிமான நிறுவனப் பங்குகள் மட்டும் பாதிப்பில் இருந்து தப்பி, விலையேற்றத்தைக் கண்டன. 


இதனிடையே, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, இன்று 74 ரூபாய் 50 பைசாவாக குறைந்தது. 


அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள் தங்கள் வசமிருந்த பங்குகளையும், கடன்பத்திரங்களையும் அதிக அளவில் விற்பனை செய்ததே பங்குகளின் விலை வீழ்ச்சிக்கும், ரூபாய் மதிப்பின் சரிவுக்கும் முக்கியக் காரணம் என்று கருதப்படுகிறது.

இது தொடர்பான செய்திகள் :