குறிப்பிட்ட பயிர்களுக்கு மேலும் விலையை உயர்த்த மத்திய அரசு திட்டம்

Home

shadow

நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை குவிண்டாலுக்கு 200 ரூபாய் உயர்த்த, டெல்லியில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

உத்தரப்பிரதேசம், உத்தரகண்ட், மகாராஷ்டிரா, பஞ்சாப், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த கரும்பு விவசாயிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி, அண்மையில் நமோ செயலி மூலம் கலந்துரையாடினார். அப்போது, வரும் சம்பா சாகுபடி பருவத்தில், உணவு தானியங்கள் உள்ளிட்ட குறிப்பிட்ட பயிர்களுக்கு, விவசாயிகளின் மொத்த இடுபொருள் செலவுகளில் 150 சதவீதத் தொகையை குறைந்தபட்ச ஆதரவு விலையாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இதன்மூலம் விவசாயிகளின் வருமானம் உயர வழிபிறக்கும் என்றும் பிரதமர் மோடி உறுதியளித்திருந்தார். குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்தும் முடிவுக்கு மத்திய அமைச்சரவையை விரைவில் கூட்டி ஒப்புதல் அளிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். அதன்படி டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெற்றது.  இந்தக் கூட்டத்தில் நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை குவிண்டாலுக்கு 200 ரூபாய் அதிகரிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. மேலும் துவரம் பருப்புக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை குவிண்டாலுக்கு 225 ரூபாயும், பாசிப் பயறுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை குவிண்டாலுக்கு ஆயிரத்து 400 ரூபாயும் உயர்த்துவதற்கும் ஒப்புதல் வழங்கப்பட்டது

இது தொடர்பான செய்திகள் :