கோடீஸ்வரர்கள் பட்டியல் – அம்பானி முதலிடம்

Home

shadow


போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ள இந்திய கோடீஸ்வரர்கள் பட்டியலில் தொடர்ந்து 11-வது ஆண்டாக  முகேஷ் அம்பானி முதலிடம் பிடித்துள்ளார்.


பிரபல பத்திரிக்கையான  போர்பஸ்  இந்தியாவின் கோடீஸ்வரர்கள் பட்டியலை ஒவ்வொரு வருடமும் வெளியிட்டு வருகிறதுஇ. அந்தவகையில் இந்த ஆண்டுக்கான இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரர்களுக்கான பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில் ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி முதலாவது இடத்தை பிடித்துள்ளார். அம்பானியின் சொத்து மதிப்புகள் சுமார் 3 லட்சத்து 48 ஆயிரம் கோடி ரூபாயகும். இந்த வருடம் மட்டும் அவரின் சொத்து மதிப்பு சுமார் 68 ஆயிரம் கோடி ரூபாய் அதிகரித்துள்ளது. இதேபோல் இந்த ஆண்டும் இரண்டாம் இடத்தில் விப்ரோ தலைவர் அஸிம் பிரேம்ஜி  உள்ளார். அவரின் சொத்து மதிப்பு சுமார் 1 லட்சத்து 45 ஆயிரம் கோடி ரூபாயாகும். அர்செலோர் மெட்டல் குழுமத்தின் தலைவர் லக்‌ஷ்மி மித்தல் 1 லட்சத்து 34 ஆயிரம் கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார். 100 பேர் கொண்ட பட்டியலில் இந்த ஆண்டு  4 பெண்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளனர். 

இது தொடர்பான செய்திகள் :